நீ மறுத்துவிட்ட மறுகணமே நான் மரணித்து விட்டேன்

Thursday, 17 December 2009

நம் காதலின் சில பதிவுகள்....

நீ உறங்கிய பின் உன் அமைதியை ரசிக்கும் நான்...
நான் எழும்முன் என் அமைதியை ரசிக்கும் நீ...

உனக்கு தெரியாமல் உன் தேனீரை கொஞ்சம் நான் பருகியதும்...
எண்னாக்கு தெரியாமல் என் சட்டைக்கு நீ இட்ட முத்தங்களும்...

நீ கொடுத்து அனுப்பிய உணவின் நடுவில் ஒளிந்திருந்த சாக்லட்டும்...
அதே உணவுக் கூடேயில் நீ பார்த்த ஒற்றை ரோஜாவும்...

எனக்கான உன் பிரார்த்தனைகளும்....
உனக்கான என் பரிசுகளும்...

நீ நான் என் பிரித்து எழுதியதற்காக நீ கொண்ட கோபமும்...
நெற்றியில் நான் இட்ட சமாதான முத்தமும்....
கலந்துவிட்ட கண்ணீர் நாம் உதடுகளில் இனிக்கும் தருணமும்...

நம் காதலின் சில பதிவுகள்....

No comments: